
யூ.கே. காலித்தீன்
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச். சனுஸ் காரியப்பர் அவர்களின் தலைமையில் ,2022. 02. 16 ம் திகதி மாலை 07.00மணிக்கு நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி அல்-ஹாஜ் ஏ.ஆர்.எம். தௌபிக் கலந்து சிறப்பித்தார்.
வைத்தியசாலையின் அபிவிருத்தி சபை குழுவின் அழைப்பின் பெயரில் கௌரவ மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.ரிபாஸ், முன்னாள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினதும் தற்போதய மட்டக்களப்பு பிராந்திய சேவைகள் பணிமனையின் பணிப்பாளருமான வைத்தியர்
ஜி. சுகுணன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பி. அப்துல் வாஜித், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின்
தர மேலாண்மை மருத்துவ வைத்தியர் பி.ஜி.பி.டேனியல், கணக்காளர் திருமதி.எம்.எம். உசைனா பாரிஸ், உயிரியல் மருத்துவ பொறியியளாலர்
ஆர். ரவிச்சந்திரன் ஆகியோரோடு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம். நியாஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிர்வாக அதிகாரி திரு.எஸ். சுப்பராஜன்,
பிரதேச மருந்தகர் திருமதி எஸ். இந்திரகுமார், இலங்கை வரலாற்றில் மருத்துவமனை மேம்பாடுகளின் வைத்தியசாலைகளுக்கான அபிவிருத்தி சங்கத்தை நிறுவுவதில் முதன்மையாக இருந்தவர் என்கின்ற பெருமைக்குரியவர் ஓய்வு பெற்ற வைத்தியர் அல் ஹாஜ். எம்.ஐ.எம்.ஜெமீல் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததோடு வைத்தியசாலையின் அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி நிகழ்வானது சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி சபையினரால் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பகுதிக வளம், ஆளனி பற்றாக்குறை நிபர்த்தி, திறமைகள் மற்றும் அனுபவத்தினூடக கல்முனைப் பிரதேசத்தின் சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்கு பெரும் சொத்தாக மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் சிறந்த பங்களிப்புகளை செய்ய உதவி புரிந்தவர்களை கௌரவித்து பாராட்டி நினைவுச் சின்னமும் பொன்னாடையும் போத்தி கௌரவிக்கப்பட்டனர்.
அதேவேளை சாய்ந்தமருது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற ஊழியர்களையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.