
அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நாட்டின் காகிதங்கள் இல்லாத காரணத்தால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் அச்சக திணைக்களத்திற்க்கான முக்கியமானவர் தெரிவித்தார்.
இதன்காரணமாகவே பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்ற புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் போன்றவற்றை அச்சிடுவதிலும் சிக்கல் நிலவுவதாக அவர் கூறினார் .
இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற டொலர் தட்டுப்பாட்டின் விளைவாக சில மாதங்களாக காகிதத்தினை நாட்டிற்கு இறக்குமதி செய்ய இயலாத சூழல் ஏற்பட்டது.
அதற்க்கு பிறக துறைமுகத்தில் சிக்கியிருந்த காகிதங்கள் அடங்கிய 8 கொள்கலன்களையும் விடுவிக்கப்பட்டன.
எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்பட்ட காகிதங்கள் தற்போது முடிவடைந்துள்ளதன் விளைவாகவே அச்சிடும் பணிகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.