
நூருல் ஹுதா உமர்
“நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வுகள் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (13) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே ஜெகதீசன் கலந்து கொண்டதுடன் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் பாத்தீபன், நிர்வாக உத்தியோகத்தர் த . கமலநாதன், அம்பாறை மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேக்கா எதிரிசிங்க, கேப்ஸோ நிறுவன திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்தாத், காரைதீவு பிரதேச மகளிர் அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்