
யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ் விடயம் தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர்.பரிசோதனைகளின் மாதிரி சேகரிப்பு பணியிலிருந்து வைத்தியர்கள் விலகுவதால் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்படுகின்றது என்று குறிப்பிடடார்.
இதேவேளை, நோயாளிகளுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.