(நூருல் ஹுதா உமர் )
சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டிருக்கின்றது.
நடப்பு சம்பியன் என்பதினால் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்த, சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் விளையாட்டு கழகத்தினை எதிர்த்தாடிய பிளாஸ்டர் விளையாட்டுக்கழகத்தின் வீரர் அப்லால் காரியப்பரினுடைய அபார அதிரடியாட்டத்தினால் வெற்றியடைந்தாது.
சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்துடன் இறுதியாக நடைபெற்ற போட்டியிழும் மோதி அதிலும் ஓர் இலகு வெற்றியை பதிவு செய்து 2022 ஆம் ஆண்டுக்குரிய சம்பியனாக மகுடத்தை சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சூடிக்கொண்டது.