ஒரு கிலோகிராம் கோதுமை மாவினுடைய விலையை மேலும் 50 ரூபாவினால் அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கின்றது.
குறித்த நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவினை 35 ரூபாவினால் அதிகரித்திருந்தமை குறிப்பிடதக்கது .
அந்தவகையில் தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மா 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அதன் விலை மேலும் 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுமாயின் 200 ரூபாவை விட உயரும் என்பதுடன், தமது தொழிற்துறையினர் பாரிய அசௌகரியங்களினை எதிர்நோக்க வேண்டியே சூழல் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.