புத்தாண்டு பிறப்பதற்கு சில மணித்தியாலங்களே உள்ள நிலையில், காலி முகத்திடலில் இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், காலி முகத்திடலில் வெற்று பிளாஸ்டிக் போத்தல்களை கொண்டு ‘GoHomeGota’ என வடிவடிமைத்துள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினம் (13) ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தாண்டு விளையாட்டுக்களை விளையாடுவதையும் காண முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.