
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது ஆட்சிக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை பொதுமக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை நடத்தவுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை (27) நள்ளிரவு முதல் வியாழன் (28) நள்ளிரவு வரை 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளார்கள் .
இதில் முக்கிய ரயில்வே தொழிற்சங்கங்கள் சேர்த்து கிட்டத்தட்ட 30 தொழிற்சங்கங்களை இணைந்து இந்த வேலை நிறுத்தத்திலும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடதக்கது.