
மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அவசர உதவியை இத்தாலி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதற்காக 125 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்குவதாக கொழும்பில் உள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) இத்தாலிய இருதரப்பு அவசர நிதியத்தின் மூலம் இந்த பங்களிப்பு வழங்கப்படும் என்று தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சப்ளை செயின் மேனேஜ்மென்ட் செயல்முறைக்கு ஏற்ப சுகாதார அமைச்சினால் திட்டமிடப்பட்ட கொள்முதல் படி வெளிநாடுகளில் உள்ள சப்ளையர்களுக்கு நேரடியாக பணம் செலுத்த அனுமதிக்கப்படும் என்று இத்தாலிய தூதரகம் மேலும் கூறியது.