
நொரோச்சோலையில் உள்ள 270 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்விநியோகம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்தடையை சரிசெய்வதற்காக இலங்கை மின்சார சபை திருத்த வேலைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.
5 நாட்களுக்குள் நொரோச்சோலை ஆலையுடன் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய மின்வெட்டை மேலும் நீடிக்காமல் நிர்வகிப்பதாக இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
அனல் மற்றும் நீர்நிலையங்களை பயன்படுத்தி மின்வெட்டுகளை நிர்வகிப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.