
அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் நடேசனின் இல்லத்தில் யாரை சந்தித்தார் என்பதை வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டார்
பாராளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இந்த விடயம் குறித்து தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச ஒப்பந்தமொன்றும் செய்துகொண்டதாகவும் குற்றம் சுமத்தினார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த எதிர்க்கட்சியினுடைய தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறான எந்த விடயமும் நடக்கவில்லை என்றுரைத்தார்.