
கட்சித் தலைவர்களின் சிறப்புக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜூம் தொழில்நுட்பம் மூலம் நடைபெறுகிறது.
தற்போதைய நாட்டின் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக விசேட கட்சித் தலைவர்களினுடைய கூட்டத்தினை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நேற்று சபாநாயகரான மஹிந்த யாப்பா அபேவர்தன கூறியிருந்தார்.
நாடு கடும் நெருக்கடியில் இருக்கும் வேளையில் சபாநாயகர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதற்கு சமூக வலைத்தள பயனாளர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
கட்சித் தலைவர்களின் கூட்டத்தை ஜூம் தொழில்நுட்பம் மூலம் நடத்தலாம் என்றும் சமூக ஊடக பயனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய நாட்டினுடைய நிலைமைகள் பற்றி விவாதிக்க மிகவும் முக்கியமான கட்சித் தலைவர்களினுடைய கூட்டத்தை நடத்துவதற்கு ஜூம் இணைப்பில் தொடர்வதற்கு பல கட்சித் தலைவர்களும் முன்வந்துள்ளனர்.
