
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த இருவரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர்களை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்கள் இருவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.