
இந்த நெருக்கடியானது கூடிய விரைவில் ஒரு புதிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. எவ்வாறாயினும், ஒரு அரசை அமைக்கும் போது, போராட்டம் நடத்தும் இளைஞர்களின் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும்.
எனவே, நாட்டை அராஜகம் மற்றும் அழிவில் இருந்து தடுக்க பின்வருவனவற்றை நாங்கள் முன்மொழிகிறோம்.
எமக்கு சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் தேவை.எமது நாட்டை அழித்த மாபெரும் மோசடி மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக ராஜபக்ஷ குடும்பத்தை வழக்குகளில் இருந்து பாதுகாக்கும் அரசாங்கம் எமக்கு தேவையில்லை.சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் அரசாங்கம் எமக்கு தேவை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறானதொரு அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளித்து பதவி விலகுவதற்கான திகதியை அறிவிக்க வேண்டும்.
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம் 20ஆவது திருத்தத்தை உடனடியாக நீக்கி நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவி அரசியலமைப்பில் ஜனநாயக சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.
தேர்தல் சீர்திருத்தங்கள் அரசியல் கட்சிகள் திரட்டும் நிதி மற்றும் ஒவ்வொரு கட்சிக்கும் கொடுக்கப்பட்ட ஊடக இடத்தின் பொறுப்புக்கூறல் கொண்டு வரப்பட வேண்டும். சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கைப் போன்று மோசடி மற்றும் ஊழலைத் தடுக்கும் பொறிமுறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
இடைக்கால அரசாங்கம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில் சுதந்திரமான தேர்தல்கள் ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்தி இந்த நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியாக தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தை தெரிவு செய்ய முடியும்.