இன்றைய வர்த்தக நடவடிக்கைகளின் படி கொழும்பு பங்குச் சந்தை (CSE) நேர்மறையான குறிப்பில் முடிவடைந்த நிலையில் மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பங்கு விலைக் குறியீடு (ASPI) 343.79 புள்ளிகள் (4.43%) அதிகரித்து 8098.41 இல் முடிவடைந்ததாக CSE தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், S&P SL 20 குறியீட்டு எண் 139.56 புள்ளிகள் (5.52%) அதிகரித்து 2,669.73 இல் முடிவடைந்தது.
(CSE) விற்பனை முதல் ரூ. 2.18 பில்லியனாகவும், மதியம் 12.30 மணியளவில் வர்த்தகத்தின் முடிவில் பங்கு அளவு 117.45 மில்லியனாகவும் இருந்தது.