
நாட்டில் பரவிய வன்முறைகளால் அழிக்கப்பட்ட வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ 2,000 கோடி ரூபாய்.
காலிமுகத்திடலில் நிராயுதபாணியாக இருந்த போராட்டக்காரர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து போராட்ட காரர்களால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களில் 2,000 கோடி ரூபாய் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் 65 அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், எரிந்து நாசமான வாகனங்களின் எண்ணிக்கை சுமார் இருநூறு என மதிப்பிடப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமான மல்வானையில் வீடு சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், சுமார் இருநூறு கோடி சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக லங்காதீப இணையத்தளம் மேற்க்கோள் காட்டி செய்தியினை வெளியிட்டுள்ளது.
அத்துடன், சிங்கராஜா எல்லையில் அமைந்துள்ளரோஹித ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் ஹோட்டலும் சிலரால் எரித்து நாசம் செய்ததோடு, சுமார் இருநூறு கோடி சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.