பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்படும் முற்போக்கான தீர்மானங்களுக்கு புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தமது பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டுக்கு நன்மை பயக்கும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பதவிகளை ஏற்காமல், பாராளுமன்ற செயற்பாட்டின் ஊடாக தமது பூரண ஆதரவை வழங்குவதற்கு தமது பாராளுமன்ற குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக சமகி ஜன பலவேகய தெரிவித்துள்ளது.
சமகி ஜன பலவேகய எம்.பி.க்களுடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்ய முயற்சித்தால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றும் சமகி ஜன பலவேகய எச்சரித்துள்ளது.