
லிட்ரோ கேஸ் புதன்கிழமை (மே 18) முதல் தினசரி 80,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு எரிவாயு ஏற்றுமதிகளுக்காக இன்று 07 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படும் என லிட்ரோ கேஸ் தெரிவித்துள்ளது.
3,700 மெற்றிக் தொன் எல்பி வாயுவை ஏற்றிச் செல்லும் ஒரு கப்பல் இன்று தீவை வந்தடையும் என்றும் மற்றுமொரு கப்பல் புதன்கிழமை வந்து சேரும் என்றும் எல்பி கேஸ் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.