
இன்று (19) தொடக்கம் 80, 000 சமையல் எரிவாயு கொள்கலன்களினை நாளாந்தம் சந்தைக்கு வழங்குவதற்கான செயற்பாடுகளை லிட்ரோ நிறுவனம் முன்னெடுத்திருக்கின்றது.
மேலும், 3, 800 மெட்ரிக் டொன் அளவுடைய எரிவாயு கப்பலொன்று நாட்டினை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்க பெறுகின்றன.
நேற்றுமுன்தினமான (17) ஆம் திகதி 2, 800 மெட்ரிக் டொன் எரிவாயு தாங்கியுடைய கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்திருந்த நிலையிலும், நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினாலும் கப்பலிருந்து எரிவாயுவினை தரையிறக்கும் செயற்பாடுகளின் போது பல சிக்கல்கள் ஏற்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கப்பல் ஆனது கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, அங்கிருந்து சமையல் எரிவாயு தரையிறக்கும் பணிகள் நடைபெற்றது, தரையிறக்கிய எரிவாயு தாங்கிகள் கொண்ட ஊர்திகளின் உதவியுடன் கெரவலப்பிட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு எரிவாயு எடுக்கும் செயற்பாடு முழுமை பெற்றிருந்தது .
மேலும் திட்டமிட்டப்படி நாடுமுழுவதும் வழங்கப்படவிருந்த எரிவாயு விநியோகங்கள் தடைப்பட்டிருந்தது.
இந்த சூழ் நிலையில், நேற்று 8, 000 சமையல் எரிவாயு கொள்கலன்களினை மாத்திரமே விநியோகித்ததாக தெரியவருகின்றது.