
எதிர்வரும் வாரத்தின் முற்பகுதியில் இருந்து தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதேவேளை நுரைசோலை மின் உற்பத்தி நிலையமானது தேசிய மின் நிலைய கட்டமைப்புகளுடன் இன்றிலிருந்து இணைக்கப்படவுள்ளதாகம் தெரிவித்தார்.
இன்நடவடிக்கை மூலம் நாட்டினுடைய மின்சார தேவைகளினை பூர்த்தி செய்வதற்கு தாம்எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார் .
இதேவேளை, கல்வி பொது தாராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கருத்திற்கொண்டு இன்று மின் துண்டிப்பை அமுல்படுத்தாதிருப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.