
தற்போதைய சூழ் நிலையில் புதிய நிதி அமைச்சர் தொடர்பான எந்தவொரு முடிவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே ஆகிய இருவரும் எடுப்பார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் பதில் நிதிமையச்சராக நாட்டினுடைய ஜனாதிபதி செயற்படுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்ததில் இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சரான காஞ்சன விஜேசேகர இவ்விடயம் தொடர்பாக தெரிவித்திருக்கின்றார்.