
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவு தீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட தீவை மீட்பதற்காக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன
“பிரதமர் தமிழகத்திற்கு வந்தபோது, சில விஷயங்களுக்காக நான் வேண்டுகோள் விடுத்தேன். கடலில் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க கச்சத்தீவு தீவை இலங்கையிடம் இருந்து மீட்டுத் தருமாறு பிரதமரிடம் கேட்டுக்கொள்டோம்” என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், தமிழக கடலோர மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கச்சத்தீவு மீட்கவும், தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடி வலயம் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.
இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வாக கச்சத்தீவை மீட்பதற்கும், அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பதற்கும் இது சரியான தருணம் என்றும் முதலமைச்சர் கூறினார்.
இரு அண்டை நாடுகளுக்கு இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.