
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஆகஸ்ட் 29 ஆம் திகதி வரை கொழும்பு நீதவான் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைன் தனது விஜயத்தின் போது கொழும்பு தும்முல்லை வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர்களான மொஹமட் முஸம்மில், பியசிறி விஜேநாயக்க மற்றும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ரோஜர் செனவிரத்ன ஆகியோர் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2016ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது கொழும்பு தும்முல்லையில் உள்ள ஐ.நா தலைமையகத்தை சுற்றி வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் முறைப்பாடு செய்திருந்தனர்.