வெளிநாட்டவர்களுக்கான நீண்டகால வதிவிட வீசா திட்டமான ‘கோல்டன் பரடைஸ்’ வீசா திட்டத்தின் அறிமுகம் இன்று பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெற்றது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் தலைமையில் இது இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ‘கோல்டன் பாரடைஸ்’ வீசா திட்டத்திற்கான பிரத்யேக இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.