
மல்லிகை மணக்கும் மாலை நேரம், எல்லோரும் தத்தமது வேலை முடிந்து வீடு நோக்கி புறப்பட நான் மட்டும் என் வேலையை
தொடங்க புறப்பட்டேன். ஆம் அந்த ரீட்டாஸ் வெதுப்பகத்துக்கு வீட்டிலிருந்து இப்போது நடந்துதான் செல்கின்றேன்.
அங்கிருந்து பாண் ஆட்டா என்கிற ஊரின் எல்லை வரை சென்று ஊர் சுற்றும் தொழிலை செய்துவிட்டு இரவாகித்தான்
வீடடைவேன். இன்றும் அப்படித்தான் பாண் ஆட்டாவை ஒவ்வொரு ஒழுங்கைக்குள்ளும் ஓட்டிச்செல்கிறேன். பாண் விற்றபாடில்லை. சில
மாதங்களுக்கு முன் தெரிந்தவர்கள் கண்டால் பேசி கிண்டலடித்து விட்டுத்தான் போவார்கள்,
அப்படியும் இல்லாவிட்டால் தலையசைத்து வணக்கம் சொல்வர். அவர்களும் இன்று தலைதூக்கிப் பார்த்தால், பாண் எடுக்கச் சொல்வான் என்று தலைநிமிராமல் தரையிலுள்ள கற்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
நான் சற்று வேகமாக சென்றாலும் கடிந்து கொண்டு பாண் எடுக்கும் வீட்டார்கள் வெளியில் என்னை கண்டதும் வீட்டுக்குள்
சென்று கதவடைக்கஇ மனமுடைந்தது. இத்தனைக்கும் நான் செய்த குற்றம் எதுவுமில்லை. என்னை வெறுக்கிறார்களா..இ இல்லை பாணை வெறுக்கிறார்களா…இ அதுவுமில்லையென்றால்இ பாண் ஆட்டாவின் பின்னால் ஒட்டியிருந்த பாண் விலையினாலா தெரியவில்லை.
கடனுக்கு வாங்கிய பாணின் காசை எடுக்க கமலா மாமியின் வீடருகே ஆட்டாவை நிறுத்தி..இ பேசுகிறேன் ஆளையே காணவில்லை. ( பக்கத்து ஹோட்டலில்… பேசுகிறேன்… பேசுகிறேன்… உன் இதயம் பேசுகிறேன்… )என்று பாடியது ரேடியோ
கன நேரம் காத்துக்கிடந்ததால்இ இனியும் போகமாட்டான் என்றுணர்ந்த அவர் காசோடு வந்து கொடுத்துவிட்டு கடன் கழித்தா. அடுத்த கடன் வாங்கவில்லை. பாண் விலை குறைந்தால் என் காலடிக்கு வரத்தானே வேணும்இ என்று புலுங்கிக்கொண்டு அடுத்த தெருவை அடைந்தேன்.
அந்த தெருவில் இருப்பவர்கள் சற்று வித்தியாசமானவர்கள். தம் குழந்தைகளை விட்டுத்தான் பாண் ஆட்டா பிடிப்பர். இன்றும் ஒரு
சிறுவன் என் ஆட்டா பின்னாடி ஓடிவர நிறுத்தினேன். தவறிவந்த மகனை கத்தி கூப்பிட்டா அந்த தாய். இதற்கு மேலும் என் மனம்
தாங்கவில்லை. திரும்பிச்சென்று பாண் இரண்டு கொடுத்தேன்.
அந்த சின்ன தாஸனின் அன்னாந்து பார்க்கும் பார்வை சொன்னது. பசியின் கோறப்பிடியில் சிக்கித்தவிக்கும் வலியை….
தாயின் அலறல் கதறலாக மாறி கண்ணீரில் முடிந்த கதையை வைத்து அறிந்தேன்இ வேண்டுமானதை வேண்டமுடியாத நிலையை….
பாணை வாங்கிக்கொண்ட சின்ன தாஸன் “அப்பா இனியும் கேட்க மாட்டன். மன்னிச்சிக்கொங்கோ..” என்று சொல்லிவிட்டு அம்மாவிடம் போய்ச்சேர்ந்தான். பாண் வாங்கியதால் இன்றைய சம்பளம் எப்படியும் கிடைக்காது. என்றுணர்ந்த என் மனைவிஇ அடுத்த வேளை உணவிற்கு எதை செய்து சமாளிப்பது என்ற மௌனமான கேள்வியில் முள்சூழ்ந்தும் சிரிக்கும் ரோஜாவாய் என்னை பார்த்தாள். சின்னதாசனின் இப்போதைய பசியை நான் போக்கிவிட்டேன். இன்னும் எத்தனை தாஸன்களின் பசிக்கதை கதவுதட்டப்போகிறதோ.., நீங்களே பதிலளியுங்கள்.
இப்படிக்கு அன்புடன்,
தாஸன்.
(இஷ்ஹாரா இஸ்மத்)