
பங்களாதேஷ் 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் எம்.டி அரிபுல் ஸ்லாம் அவர்களினால் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இந்த மருந்துகள் கையளிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், வைரஸ் தொற்று, வலிப்பு மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 79 அத்தியாவசிய மருந்துகளும் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர், தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை மிகவும் நட்பு நாடாக கருதப்படுவதாக தெரிவித்தார்.