
எதிர்காலத்தில் நாட்டில் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாய சங்கங்கள் எச்சரிக்கின்றன. தற்போது நிலவும் உரம், எரிபொருள், விதை தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
கலப்பின விதைகளை இறக்குமதி செய்ய சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு எரிபொருள் டேங்கரை இறக்குமதி செய்ய சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும்.
அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்னவும் நாட்டில் உள்ள நெல் கையிருப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டார்.