தங்கள் பகுதியில் தற்போதுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் இருப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய புதிய இணையதளத்த்தினை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உருவாக்கியுள்ளது.
http://fuel.gov.lk க்குச் சென்று உங்கள் மாகாணம், மாவட்டம் மற்றும் நகரத்தை உள்ளிட்டு, அந்த நகருக்கு அருகில் ஏதேனும் எரிபொருள் இருப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய தேவையான எரிபொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் நிறுவனம் (CPPCL) இந்த இணையத்தளத்தில் தினமும் காலை 9 மணிக்கு பெட்ரோல் நிலையங்களில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் குறித்து வெளியிடும்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை ஏற்றிச் செல்லும் பௌசர்கள் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்களை விட்டு வெளியேறிய பின்னர் இந்த இணையத்தளம் அந்தந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருள் இருப்புக்களை உள்ளடக்கும் என்பது குறிப்பிட வேண்டிய விடையமாகும்.