அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்களை அரசாங்கம் நியமித்துள்ளது.
இந்த நியமனங்களை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தனது அமைச்சில் வைத்து அறிவித்தார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) தலைவராக அசங்க பிரியநாத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் (ITN) புதிய தலைவராக பட்டய கணக்காளர் கனக அமரசிங்க அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) ஹட்சன் சமரசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.