எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் முறைப்படுத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வகை எரிபொருளின் விலையும் 100 ரூபாவால் அதிகரிக்கப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.