தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைகளை குறைக்க வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.
மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்த முடிவை எடுக்க நேரிட்டதாக மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவமனை நிர்வாகத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகளின் எண்ணிக்கை ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டு இருதய சத்திரசிகிச்சை பிரிவுகள் மாத்திரம் இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாம் உட்பட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும் அத்தியாவசிய சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூட சுகாதார ஊழியர்கள் 6 மணி முதல் 10 மணித்தியாலங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் இந்த வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு எரிபொருள் நெருக்கடி காரணமாக நிலைமையை தெரிவிப்பதில் சிரமம் இருப்பதாக தெரிவித்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.