
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவை களஞ்சியசாலையில் இருந்து எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
டோக்கன் வழங்குவோருக்கு எரிபொருள் விநியோகம் ஜூலை 10 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளதால் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசிய சேவைகளில் இருந்து மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக முத்துராஜவெல முனையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய தாங்கி வாகன உரிமையாளர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இவர்தான் அதன் இணைச் செயலாளர் சாந்த சில்வா.
இதேவேளை, தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் இன்றும் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமக்கு வழங்கப்பட்ட எரிபொருளின் அளவு போதுமானதாக இல்லை என எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்த சாரதிகள் தெரிவித்துள்ளனர்.