விமான போக்குவரத்து அமைச்சு தனியார் நிறுவனத்துடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (05) பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைகள் முடியும் வரை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா விலகுவார் என ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் குறிப்பிட்டுள்ளார்.