நூருள் ஹுதா உமர்
இம்மாதம் 4, 5ம் திகதிகளில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான கல்முனை வலயமட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 28 தங்கம், 21 வெள்ளி மற்றும் 7 வெண்கள பதக்கங்களையும் பெற்று மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 08 அஞ்சலோட்ட போட்டிகளில் 5 முதலிடமும், 2 இரண்டாமிடங்களையும் பெற்று அஞ்சலோட்ட போட்டியில் சம்பியனாக தெரிவு செய்ப்பட்டதுடன், ஆண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிப்பிரிவில் 131 அதிகூடிய புள்ளிகளைப் பெற்று கல்முனை வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.