
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சார்பில் கருணாரத்ன பரணவிதான மற்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.