முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்க விடுதலை வழங்குவதற்காக உண்மைகளை பரிசீலித்து அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சரின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தள கணக்கிலும் பதிவிடப்பட்டுள்ளது.