இலங்கையில் நிலவும் அவசரகால நிலை காரணமாக, பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்கும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினுடைய பணிப்புரையின் கீழ் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் கையொப்பமிட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
