
ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுவின் விசேட கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (26) பிற்பகல் நடைபெறவுள்ளது.
திரு.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குழு ஒன்று கூடுவது இதுவே முதல் தடவையாகும்.
அவசரகாலச் சட்டத்தினை ஏற்றுக்கொள்வதோடு சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாளை (27) பாராளுமன்ற விசேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தற்போதைய அவசர சட்ட விதிமுறைகள் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்துக்காக.
அவசர சட்டம் பிரகடனப்படுத்திய 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
அதற்கான விவாதம் நாளை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
Good post. I learn something new and challenging on sites I stumbleupon everyday. Its always interesting to read articles from other authors and practice something from other sites.