
நீதிமன்ற உத்தரவை மீறி கல்லுமுவதொர பண்டாரநாயக்கவின் சிலைக்கு அருகில் நின்ற நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக தற்போது கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கல்லுமுவதொர பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் பிரவேசிக்கக் கூடாது என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 20ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.
இதனை மீறி அவ்விடத்தில் நின்றிருந்தமைக்காகவே குறித்த நான்குபேரையும் கைது செய்திருக்கின்றனர்.
Good post. I learn something new and challenging on sites I stumbleupon everyday. Its always interesting to read articles from other authors and practice something from other sites.