QR குறியீட்டு முமையின் அடிப்படையில் வாகனங்களுக்கான வாராந்த பெற்றோல் மற்றும் டீசல் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, முச்சக்கரவண்டிக்கு 5 லீற்றரும், சிற்றூர்ந்து, மகிழுந்துகளுக்கு 20 லீற்றரும், பாரவூர்திகளுக்கு 50 லீற்றரும் பெற்றோல் மற்றும் டீசல் என்பன வாராந்தம் ஒதுக்கப்படவுள்ளது.
அத்துடன், உந்துருளிக்கு 4 லீற்றர் பெற்றோலும், பேருந்துகளுக்கு 40 லீற்றர் டீசலும் வாராந்தம் ஒதுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
