பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதி அமைப்பாளர்கள் மற்றும் உதவி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை பிரதமர் தினேஷ் குணவர்தன வழங்கி வைத்தார்.
இதன்படி, பிரதி அமைப்பாளர்களாக சாகர காரியவசம் மற்றும் ஜயந்த கட்டகொட ஆகியோரும், உதவி அமைப்பாளர்களாக கோகிலா குணவர்தன, மதுர விதானகே மற்றும் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.