நான்காவது கொவிட் எதிர்ப்பு தடுப்பூசிக்கு நடமாடும் வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட தேவைக்கு ஏற்ப நடமாடும் தடுப்பூசி வாகனங்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
குறித்த நான்காவது தடுப்பூசிகள் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.