ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக அமையும் என ஜனாதிபதிக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய மூலோபாயத்தை தயாரிப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.