கிளைபோசேட் களைக்கொல்லி இறக்குமதிக்கான தடையை நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2014 ஆம் ஆண்டு கிளைபோசேட் உட்பட பல களைக்கொல்லிகள் மற்றும் விவசாய இரசாயனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. அந்த களைக்கொல்லிகளில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரோமெட்டல்கள் இருப்பதாக பல தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருந்தபோதும் களைக்கொல்லியான கிளைபோசேடினது தடையினை நீக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் இத்தீர்மானத்திற்ற்கு எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.