கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற 06 கலவரச் சம்பவங்களுக்கு முன்முயற்சி எடுத்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் கயான் டி மெல் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விடுத்திருந்த அறிவித்தலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் இன்று (08) காலை தனது சட்டத்தரணி ஊடாக பிலியந்தலை பொலிஸில் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்கள்.