ஒரு கோப்பை தேநீரின் விலையை 30 ரூபாவினாலும், 200 ரூபாவிற்கு மேற்பட்ட உணவு பொதி ஒன்றின் விலையை 10 சதவீதத்தினாலும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை குறைப்புடன் ஒப்பிடும் போது இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சலுகை வழங்காத ஹோட்டல்கள் தொடர்பான தகவல்களை 078 871 77 26 என்ற இலக்கத்தின் ஊடாக வழங்குமாறும் அவர் வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.