தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தொடர்ச்சியான செயற்பாட்டுச் செலவுகள் மற்றும் மூலதனக் கடன் சேவைக் கடமைகளை ஈடுகட்ட தற்போதைய பொதுக் கட்டணங்கள் மற்றும் கழிவு கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி, நீர்க் கட்டணம் மற்றும் கழிவு கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கு நீர் வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலையை ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதி திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மின்சார முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கான மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.