முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என விதிக்கப்பட்டிருந்த உத்தரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நீடிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை இன்று பரிசீலித்த பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.