இலங்கையில் வௌவால் ஆய்வில் ஈடுபட்டுள்ள இளம் உயிரியலாளர் தாரக குசுமிந்த தலைமையிலான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆய்வுக் குழு, இலங்கை மற்றும் இந்தியாவில் வாழும் புதிய வௌவால் இனத்தைக் கண்டறிய முடிந்தது. மினியோப்டெரஸ் பிலிப்சி என விஞ்ஞான ரீதியாக அழைக்கப்படும் இந்த வௌவால் சிங்களத்தில் பிலிப்பின் நீண்ட தந்தை வௌவால் என அழைக்கப்படுகின்றது.
இந்த கண்டுபிடிப்பு எட்டு தசாப்தங்களுக்குப் பிறகு நாட்டிலும் இந்தியாவிலும் புதிய வகை மினியோப்டெரஸ் வௌவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு ஆசியாவில் இந்தப் பேரினத்தைச் சேர்ந்த புதிய வௌவால் இனம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இந்த புதிய வௌவால் இனத்துடன் தொடர்புடைய விலங்கு மாதிரிகள் இலங்கையிலும் இந்தியாவிலும் இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அவை வேறுபட்ட வௌவால் இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டதாரி தாரக குசுமிந்தவின் முயற்சியின் கீழ் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சிக்கு இந்த வௌவால் இனத்தின் அறிவியல் பின்னணி, உருவவியல் மற்றும் மரபணு தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
முன்பு இந்த வௌவால்கள் Miniopterus fuliginosus இனம் என தவறாக அடையாளம் காணப்பட்டதை அங்கு கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அந்த இனம் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் மிதமான காலநிலையில் மட்டுமே பரவுகின்றது.என
ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையில் வௌவால் இனத்தின் சமூகவியல் பின்னணியை உறுதிப்படுத்துவதற்கு மரபணு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.
மேலும் இவ்வாறான தொழில்நுட்பம் இல்லாதது நமது நாட்டில் வாழும் வெளவால்களின் உண்மையான இனங்கள் பல தசாப்தங்களாக சரியாக வெளிப்படுத்தப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் இது மிகவும் வருத்தமளிக்கிநின்றதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.