இலங்கையில் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு (2021) திருமண பதிவு அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2020ல் 143,061 திருமண பதிவுகள் நடந்துள்ளது, இது 2021ல் 162,628 பதிவுகளாக அதிகரித்துள்ளது.
அதிகரித்துள்ள திருமண பதிவுகளில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான திருமண பதிவுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதன் எண்ணிக்கை 18,591 எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான திருமண பதிவுகள் இடம்பெற்றுள்ளதுடன் எண்ணிக்கை 17,300 ஆகும்.
கடந்த வருடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் குறைந்தளவான திருமண பதிவுகள் இடம்பெற்றுள்ளதுடன், அதான் எண்ணிக்கை 899 ஆகும்.
கோவிட் நடமாட்ட கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுன்கள் காரணமாக, 2020ல் திருமண பதிவுகள் சற்று குறைவாக இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் துறை மேலும் தெரிவித்துள்ளது.